போலீஸ் நிலையங்களில் நீதிபதி ஆய்வு

போலீஸ் நிலையங்களில் நீதிபதி ஆய்வு செய்தார்.

Update: 2021-09-26 20:06 GMT
நாகமலைபுதுக்கோட்டை, 
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருகின்றனர். பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து  உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கஞ்சா தொடர்பான வழக்குகள் மற்றும் அதன் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் குற்றவாளிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என போலீசாருக்கு நீதிபதி புகழேந்தி அறிவுறுத்தினார். தொடர்ந்து செக்கானூரணி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் நீதிபதி ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்