நெல்லையில் பூப்பந்தாட்ட போட்டி

நெல்லையில் பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.

Update: 2021-09-26 19:35 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளியில் இளையரசனேந்தல் அப்பாசாமி நாயுடு நினைவு சுழற்கோப்பை ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. போட்டிகளை முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தூத்துக்குடி, வாசுதேவநல்லூர், உடன்குடி, வள்ளியூர், கூடங்குளம், கடையம், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட 18 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் 55 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு கீழ் உள்ளோர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் வாசுதேவநல்லூர் ரமணா பூப்பந்தாட்ட அணி முதலிடத்தையும், உடன்குடி அணி 2&வது இடத்தையும், வள்ளியூர் மார்னிங் ஸ்டார் அணி 3&வது இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி ராயல் கழகம் முதலிடத்தையும், கூடங்குளம் கூடல் பூப்பந்தாட்ட கழக அணிகள் 2, 3&வது இடத்தையும் பிடித்தன.
இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்லையா, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், மாவட்ட பூப்பந்தாட்ட கழக தலைவர் பஷீர் அலி, பொருளாளர் மாடசாமி, மதுரை விமான நிலைய மேலாளர் பிரபாகர், கூடங்குளம் சுங்க இலாகா மேலாளர் தவமணி, ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி பூப்பந்தாட்ட நடுவர் சோமசுந்தரம் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில பூப்பந்தாட்ட கழக உதவி செயலாளர் வெள்ளபாண்டியன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்