குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர்,
கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் செல்லஞ்சேரியை சேர்ந்தவர் அழகப்பன் மகன் தேவா(வயது 24). இவருக்கும் புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த தாடி அய்யனார்(28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி தேவா தனது கூட்டாளிகளுடன் சென்று தாடி அய்யானர் அவரது கூட்டாளிகளை கத்தியால் வெட்டி நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லஞ்சேரி குளத்துமேட்டு தெருவை சேர்ந்த அழகப்பன் மகன் தேவா என்கிற தேவன்(வயது 24),
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருணாசலம்(23), கீழ்குமாரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவநாதன் மகன் ஹமந்த்(20), களையூரை சேர்ந்த பழனி மகன் ராம்கி(25), கரிக்கலாம்பாக்கம்
மடுகரைமெயின்ரோடு அரசன்கோவில் தெருவை சேர்ந்த சுப்புராயலு மகன் அய்யனார் என்கிற சின்ன அய்யனார்(21), குளத்துமேட்டு தெருவை சேர்ந்த விநாயகம் என்கிற விநாயகமூர்த்தி(31) ஆகியோரை கைது செய்தனர்.
இதில் தேவா என்கிற தேவன் மீது புதுச்சத்திரம் மற்றும் சிதம்பரம் தாலுகா காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு தேவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், தேவாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேவாவை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அருணாசலம், விநாயகம் என்கிற விநாயகமூர்த்தி, அய்யனார் என்கிற சின்ன அய்யனார் ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.