16,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி பகுதியில் 84 இடங்களில் நடந்த முகாம்களில் 16,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-09-26 14:52 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 84 இடங்களில் நடந்த முகாம்களில் 16,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெகா தடுப்பூசி முகாம்

பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இதற்கிடையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு, தெற்கு, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் 3-வது வாரமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. நாச்சிமுத்து பிரசவ விடுதியில் நடந்த முகாமை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகர்புறங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் கடந்த வாரத்தை விட முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

84 இடங்களில்

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெறும் வகையில் முகாமில் தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்பட்டு ஆதார் எண் மற்றும் செல்போன் பதிவு செய்யப்பட்டது. மேலும் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்த பிறகே அவர்கள் முகாமில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். நகராட்சியில் 11 இடங்களிலும், வடக்கு ஒன்றியத்தில் 20 இடங்களிலும், தெற்கில் 15 இடங்களிலும், ஆனைமலையில் 21 இடங்களிலும், சுல்தான்பேட்டையில் 17 இடங்களிலும் சேர்த்து மொத்தம் 84 இடங்களில் முகாம் நடைபெற்றது.
பொள்ளாச்சி நகராட்சியில் 2,220 பேரும், ஆனைமலை ஒன்றியத்தில் 3,334 பேரும், சுல்தான்பேட்டையில் 2,805 பேருக்கும், வடக்கில் பேருக்கும் 3,282, தெற்கில் 2,200 பேருக்கும் சேர்த்து மொத்தம் 16,515 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்