எண்டப்புளி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு

எண்டப்புளி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-26 12:38 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சின்னப்பாண்டியன் தலைமை தாங்கினார். முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஊராட்சி செயலாளர் பிச்சைமணி, வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடபுதுப்பட்டியில் நடந்த முகாமுக்கு ஊராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுகுமார், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழவடகரை ஊராட்சி பெருமாள்புரத்தில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேதுகுமார், ஜெகதீசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் ஊராட்சி பணியாளர் ஜெயசீலன், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தாமரைக்குளத்தில் நடந்த முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் பேரூராட்சி பணியாளர்கள் பாத்திமா, சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடுகப்பட்டியில் நடந்த முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் அம்புஜம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தென்கரை பேரூராட்சியில் நடந்த முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். லட்சுமிபுரம் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஜெயமணி சந்திரன் தலைமை தாங்கினார். சருத்துப்பட்டி ஊராட்சியில் நடந்த முகாமை ஊராட்சி தலைவர் சாந்தி கண்ணையன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்