மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலி

Update: 2021-09-26 12:33 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே உள்ள அக்கரைப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் நவநீதகிருஷ்ணன் வயது 29. இவர் வெள்ளகோவில் அருகே தனியார் நூல் மில்லில் சூப்பர் வைசராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வந்தார். பின்னர் வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளகோவில்&மூலனூர் ரோட்டில், சேரன் நகர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது  எதிரே வந்த வேன் ஒன்று, நவநீதகிருஷ்ணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில்  பலத்த காயம் அடைந்த நவநீதகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே நவநீதகிருஷ்ணன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்