அந்தியூர் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
அந்தியூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
அந்தியூர்
அந்தியூர் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
நாட்டு துப்பாக்கி
அந்தியூர் அருகே விளாங்குட்டை பகுதியில் சிலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதை வைத்து வனப்பகுதிக்குள் சென்று வேட்டையாடுவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின்பேரில் பர்கூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் முருகன், தேவராஜ், சென்னிமலை ஆகியோர் விளாங்குட்டை பகுதிக்கு சென்று பெருமாள் (வயது 71) என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அவருடைய வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மாதன் என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கும் நாட்டுத்துப்பாக்கி இருந்தது.
இதையடுத்து 2 நாட்டுத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தார்கள்.
மேலும் வழக்குப்பதிவு செய்து பெருமாளையும், மாதனையும் கைது செய்தார்கள்.