பெண் உள்பட 13 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்
திருச்சி எடமலைப்பட்டி புதூரில், பெண் உள்பட 13 பேரை கடித்து குதறிய தெரு நாய்களால் மாநகராட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருச்சி, செப்.26&
திருச்சி எடமலைப்பட்டி புதூரில், பெண் உள்பட 13 பேரை கடித்து குதறிய தெரு நாய்களால் மாநகராட்சி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் தொல்லையால் மாநகரின் முக்கிய சாலைகளில் அதிக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், சாலையில் செல்வோரை நாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இரவு நேரங்களில் இருச்சக்கர வாகனத்தில் செல்வோர் நாய்களிடம் கடிபட்டும், சில நேரங்களில் வண்டியில் இருந்து கீழே விழுந்தும் பலத்த காயம் ஏற்பட்டு ஒருவித அச்சத்துடன் வீட்டுக்கு செல்கின்றனர்.
ஏற்கனவே சிறுவன் காயம்
சமீபத்தில் சங்கிலியாண்டபுரம் பகுதியில் பள்ளிச் சிறுவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ளன. இதனால், கை கால்களில் காயம் ஏற்பட்டு அச்சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். நாய்கள் அதிகமுள்ள சங்கிலியாண்டபுரம், உறையூர், கல்லுக்குழி, எடமலைப்பட்டி புதூர் மற்றும் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாய்களை வாகனத்தில் பிடித்து சென்று, அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதியில் விட்டு விட்டு சென்றனர். இது நாய்கள் பெருக்கத்தைத்தான் கட்டுப்படுத்துமே தவிர, நாய்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியாது. அவற்றை தெருக்களில் திரிய விடாமல் அப்புறப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும் என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
13 பேர் படுகாயம்
இந்த நிலையில் மாநகராட்சி 40&வது வார்டுக்குட்பட்ட எடமலைப்பட்டி புதூர் முருகன் நகர், கங்கை நகர் பகுதியில் நேற்று மாலை தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிந்தன. அவற்றை அப்பகுதியில் உள்ள ஒருவர் அப்புறப்படுத்த துரத்தி இருக்கிறார். இதனால் வெறி கொண்ட நாய்கள் ஒன்றுகூடி தெருக்களில் போவோர், வருவோரை துரத்தி கடித்து குதற தொடங்கியது. முருகன் நகர் பகுதியை சேர்ந்த கோமதி (வயது 50) என்ற பெண்ணை வயிறு, கை, கால் பகுதிகளில் கடித்து குதறி தெருவில் இழுத்து வந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள 12 பேரையும் கடித்து பதம் பார்த்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
தெருநாய் கடித்ததால் காயமடைந்த கோமதி உள்பட 13 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடிக்கான ஊசி செலுத்தி கொண்டு வீடு திரும்பினர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி கொண்டனர். “தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெரு நாய்களை பிடித்து ஒழித்தால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி இருக்க முடியும்“ என்றனர்.