தா.பேட்டை அருகே சரக்கு ஆட்டோ மோதி மாணவர் பலி

தா.பேட்டை அருகே சரக்கு ஆட்டோ மோதி மாணவர் பலியானார்.

Update: 2021-09-25 19:33 GMT
தா.பேட்டை, செப்.26&
தா.பேட்டை அருகே சரக்கு ஆட்டோ மோதி மாணவர் பலியானார்.
மாணவன்
தா.பேட்டை அருகே உள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் இறந்தார்.  இவரது மகன் பிரவீன் (14) 9&ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இவர் முசிறியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் சைக்கிளில் சென்றார்.
அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சரக்கு ஆட்டோ டிரைவர் நந்தகுமார் (41) என்பவரை கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
* திருச்சி வி.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த லால்குடியை சேர்ந்த நாகராஜின் (46) மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
*திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின்ரோட்டில் ஸ்ரீதரன்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரனிடம் (28) செல்போன் திருடிய வழக்கில் ராம்ஜிநகரை சேர்ந்த கார்த்திக் (24), சுந்தரராஜன் (27) ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.
*திருச்சி ஸ்ரீரங்கம், அரியமங்கலம், உறையூர் பகுதிகளில் பணத்தை ஜேப்படி செய்த வழக்கில் ஸ்ரீரங்கம் கன்னியப்பன் தெருவை சேர்ந்த வாசுதேவனை (21) ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசாரும், வடக்கு காட்டூரை சேர்ந்த பிரவீன்குமாரை (22) அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீசாரும், உறையூரை சேர்ந்த ராஜீவ்காந்தியை (34) உறையூர் போலீசாரும் கைது செய்தனர்.
*திருச்சி இ.பி.ரோடு கீழதேவதானத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). பெயிண்டரான இவர் நேற்று முந்தினம் குடிபோதையில் தேவதானம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து, நடந்து சென்ற போது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்