புதுக்கோட்டை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-25 19:03 GMT
புதுக்கோட்டை:
தமிழகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேடப்படும் குற்றவாளிகள், சரித்திர பட்டியலில் இடம்பெற்றுள்ள ரவுடிகள், பழைய குற்றவாளிகள் ஆகியோரை பிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் போலீசார் இந்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்களில் 25-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டதாகவும், ஆயுதங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.
  

மேலும் செய்திகள்