திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நாட்களில் 110 குற்றவாளிகள் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நாட்களில் 110 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 44 வகையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-09-25 18:26 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 நாட்களில் 110 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 44 வகையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

110 பேர் கைது

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 23&ந்தேதி இரவு முதல் நேற்று மாலை வரை திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் 421 குற்றப்பின்னியுடைய மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடு மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 

சந்தேகத்திற்கு இடமான 159 குற்றவாளிகள் போலீஸ் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மோற்கொண்டனர். அதில் 59 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 110 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஆயுதங்கள் பறிமுதல்

மேலும் அவர்களிடம் இருந்து சுத்தியல், கத்தி, அரிவாள், வாள் மற்றும் இரும்பு கம்பி என 44 வகையான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் குறிப்பிடத்தக்க நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் குற்ற பின்னணியுடைய 44 பேர் உதவி கலெக்டர்களிடம் ஆஜர்படுத்தி நன்னடைத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டும், நிலுவையில் இருந்த 5 நீதிமன்ற பிடிக்கட்டளை குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடிக்கட்டளை சார்வு செய்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்