சங்கராபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ1 லட்சம் பறிமுதல்

சங்கராபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ1 லட்சம் பறிமுதல்

Update: 2021-09-25 16:16 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் ஒன்றியத்தில் தனி வட்டாட்சியர் சத்யநாராயணன் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர்கள் சுகுமார், சுதாகர் ஆகியோரை கொண்ட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணி அளவில் சங்கராபுரம் அருகே உள்ள இளையாங்கண்ணி கூட்டு ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.1 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதை சங்கராபுரம் தேர்தல் உதவியாளர் பிரதீப்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்