ஏற்றுமதியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏற்றுமதியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

Update: 2021-09-25 10:29 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நேற்று ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக்கம் செய்வது குறித்து ஏற்றுமதியாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஏற்றுமதியாளர்களின் கண்காட்சியை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பொது இயக்குனரகம் வெளிநாட்டு வர்த்தகத்தின் இணை இயக்குனர் சகுந்தலா நாயக், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், திருவள்ளூர் கிளை மேலாளர் அசோக், சிறு, குறு மற்றும் நடுத்தர மேம்பாட்டு நிறுவன உதவி இயக்குநர் கிரண்தேவ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்