பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்த சூரியகுமாரின் மனைவி ஆர்த்தி (வயது 22). இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து சூரியகுமார் வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆர்த்தியை தேடி வருகின்றனர்.