திராவகம் குடித்த 4 குழந்தைகளின் தாய் சாவு

திராவகம் குடித்த 4 குழந்தைககளின் தாய் உயிரிழந்தார்.

Update: 2021-09-24 19:34 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி சின்ன வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் யோகாம்பாள் (வயது 54). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒரு  மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது தாயிடம் செல்போனில் சரிவர பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது.  இதனால் மனம் உளைச்சலில் இருந்த யோகாம்பாள் நேற்று கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை(திராவகம்) எடுத்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகள்