'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
திறந்தவெளி கிணற்றால் ஆபத்து
திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார்கோட்டை ஊராட்சி ஏ.டி. காலனியில் திறந்த நிலையில் கிணறு உள்ளது. காலை, மாலை நேரத்தில் அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடுவதற்காக வருவார்கள். அப்போது அவர்கள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த கிணற்றுக்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கதமிழ், தொட்டனம்பட்டி.
சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?
உத்தமபாளையம் 6-வது வார்டு மேற்கு இந்திரா நகரில் இருந்து பிஸ்மி நகருக்கு செல்லும் வழிப்பாதையில் சாலை அமைக்கப்படாததால், மண்பாதையாக உள்ளது. மேலும் அந்த பாதையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி பாதையில் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் தார்சாலை அமைப்பதுடன், சாக்கடை கால்வாய் வசதி செய்துதர வேண்டும்.
-முகமது இக்பால், உத்தமபாளையம்.
குண்டும், குழியுமான சாலை
பழனி அருகே உள்ள தும்மலப்பட்டியில் இருந்து மரிச்சிலம்பு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவாசான், மானூர்.
தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்
ஒட்டன்சத்திரம் காந்திநகர் 5-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் நடந்து செல்பவர்கள் முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் விரட்டிச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோஜ் ஆனந்த், காந்திநகர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
நிலக்கோட்டை அணைப்பட்டி ரோட்டில் உள்ள சந்தைக்கு வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக வருபவர்கள் அதிவேகமாக வந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே சந்தை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
-சபீர் முகமது, நிலக்கோட்டை.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திண்டுக்கல் முத்தனம்பட்டியில் இருந்து அழகுபட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரேம்குமார், முத்தனம்பட்டி.
கிடப்பில் போடப்பட்ட தரைப்பாலம் கட்டும்பணி
உத்தமபாளையம் தாலுகா ராயப்பன்பட்டி ஊராட்சி லூர்துநகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கியது. பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட தரைப்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்.
-ரிச்சர்டு, லூர்துநகர்.
சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? வத்தலக்குண்டுவில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்ச்செல்வன், கெங்குவார்பட்டி.