ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது42) என்பவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.