கோவில்பட்டியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

கோவில்பட்டியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Update: 2021-09-24 13:32 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86&வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் தமிழக முன்னாள் முதல்&அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், கோவில்பட்டி யூனியன் துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் எஸ்.விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, கருப்பசாமி, தூத்துக்குடி தட்சணமாற நாடார் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி ஆட்சி மன்ற குழு தாளாளர் வி.எஸ்.டி.பி. ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்