செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 107 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 107 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-09-24 10:03 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,463 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 59 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,244 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்