மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Update: 2021-09-24 04:30 GMT
ராமேசுவரம், 
ராமேசுவரத்திலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீது ரோந்து கப்பல் இருந்தபடியே கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதுடன் ராமேசுவரத்தை சேர்ந்த பல படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தி தாகவும் தெரிகின்றது.
இலங்கை கடற்படை கல்வீசி நடத்திய தாக்குதலில் ராமேசுவரத்தை சேர்ந்த இருதயம் உள்ளிட்ட 3 பேருக்கு சொந்தமான விசைப்படகுகளின் வீல் ஹவுஸ் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் ராமேசுவரம் மீனவர்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை.இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்