அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவில் கேரசமங்களா, மரவேமனே கிராமங்களில் போதிய பஸ் வசதி இல்லை. நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கோலாருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில பஸ்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ&மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் கேரசமங்களா, மரவேமனே கிராமங்களுக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிரண், கோலார்
===============
குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
பெங்களூரு மனவர்த்திபேட்டை எம்.ஆர்.லேன் பகுதியில் சாலையோரங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் முறையாக அகற்றுவது கிடையாது. நாய்கள், மாடுகள் அந்த குப்பை கழிவுகளை கிளறுவதால் அங்கு பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் எம்.ஆர்.லேன் பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.