மாணவிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2021-09-23 19:52 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்.(வயது 35). கூலித்தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், தொழிலாளி நாகராஜூவுக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபதாரமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்