நெல்லைக்கு ரெயிலில் வந்த 2,600 டன் உர மூட்டைகள்

நெல்லைக்கு ரெயில் மூலம் நேற்று 2,600 டன் உர மூட்டைகள் வந்தது.

Update: 2021-09-23 19:48 GMT
நெல்லை:
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இதையொட்டி பெருமளவு விவசாயிகள் நெல் சாகுபடி செய்வார்கள். இதற்கு தேவையான உரங்களை கொண்டுவர வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து 41 சரக்கு ரெயில் பெட்டிகளில் உர மூட்டைகள் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்குள்ள சரக்கு இறங்குதளத்தில் தொழிலாளர்கள் ரெயில் பெட்டிகளில் இருந்து உர மூட்டைகளை லாரிகளுக்கு இறக்கினர். மொத்தம் 2,600 டன் உரங்கள் வந்திருந்தது. 

அந்த உர மூட்டைகள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. 
இதேபோல் தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க மேலும் உர மூட்டைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்