கஞ்சா விற்ற 2 பேர் கைது

சிவகாசி பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-23 19:42 GMT
சிவகாசி, 

சிவகாசி காரனேசன் பகுதியில் உள்ள நகராட்சி கழிப்பிடம் அருகில் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த கருப்பசாமி (வயது 45) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவகாசி டவுன் சப்&இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், கருப்பாமியிடம் விசாரணை நடத்திபோது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் சப்&இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் பராசக்தி காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த பால் என்கிற பால்ராஜ் (65) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்