தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட் கடைகள் ஏலம்
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் கட்டப்பட்ட கீழவாசல் சரபோஜி மார்க்கெட் கடைகள் நேற்று ஏலமிடப்பட்டது. இதில் குறைவான வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் 302&ல் 22 கடைகள் மட்டுமே ஏலம் போனது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் கட்டப்பட்ட கீழவாசல் சரபோஜி மார்க்கெட் கடைகள் நேற்று ஏலமிடப்பட்டது. இதில் குறைவான வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் 302&ல் 22 கடைகள் மட்டுமே ஏலம் போனது.
சரபோஜி மார்க்கெட்
தஞ்சாவூர் கீழவாசலில் சரபோஜி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இங்கு மளிகை மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம், நாட்டு மருந்து கடைகள், காய்கறிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடைகள் இருந்தது. இங்கிருந்த 350 கடைகளையும் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது.
இதில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்து வந்ததால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டப்பட்டது. அதன்படி நான்கு பிரிவுகளாக பிரித்து ரூ.14 கோடியே 59 லட்சம் மதிப்பில் 308 கடைகள் கட்டப்பட்டது. இதில் 6 கடைகள் அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும், மீதமுள்ள 302 கடைகளை மாநகராட்சி நிர்வாகம் பொது ஏலம் விட முடிவு செய்தது.
கடைகள் ஏலம்
இதையடுத்து நேற்று காலை 11.30 மணி வரையும் அதன் பிறகு பொது ஏலமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் ஏலம் கேட்க விரும்புவோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அதே நேரத்தில் 302 கடைகள் ஏலம் கேட்க 35 வியாபாரிகளே வந்திருந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வியாபாரிகளிடம் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட கடை ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வைப்புத் தொகையும், அதற்கு குறைவான பரப்பளவு கொண்ட கடைக்கு ரூ.2 லட்சமும் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்றார். இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மேலாளர் கிளமெண்ட் ஆகியோர் கடைகளை ஏலமிட்டனர்.
302&ல் 22
மொத்தம் 302 கடைகளில் நேற்று 22 கடைகள் மட்டுமே ஏலம் போனது. இதில் குறைந்தபட்ச வாடகையாக ரூ.12 ஆயிரத்துக்கும், அதிக பட்ச வாடகையாக ரூ.34 ஆயிரத்துக்கும் கடைகள் ஏலம் போனது. முன்பு இந்த மார்க்கெட்டில் குறைந்த பட்ச வாடகையாக ரூ.308&ம், அதிகபட்ச வாடகையாக ரூ.4,424&ம் செலுத்தப்பட்டு வந்தது.
தற்போது ஏலமிடப்பட்டதன் மூலம் வைப்புத்தொகையாக ரூ.1 கோடியே 5 லட்சமும், 12 மாத கூடுதல் வாடகை டெபாசிட் தொகையாக ரூ.50 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைத்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&
பாக்ஸ்
&&&&&&&&&
காலியாக இருந்த பெட்டி
சரபோஜி மார்க்கெட் தொடர்பாக தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் கடைகளை ஏலம் எடுக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஏலம் கேட்க விரும்பும் தொகையை குறிப்பிட்டு மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்பட்டது. மேலும் இதற்கான மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஏலம் தொடங்குவதற்கு முன்னதாக காலை 11.30 மணிக்கு மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியை திறந்தபோது, அதில் ஒரு விண்ணப்பங்கள் கூட இல்லாமல் பெட்டி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆர்வம் காட்டாத வியாபாரிகள்
சரபோஜி மார்க்கெட்டில் 75 கடைகள் 91 சதுர அடியும், 10 கடைகள் 60 சதுர அடியும், 4 கடைகள் 40 சதுர அடியும், 48 கடைகள் 70 சதுர அடியும், 9 கடைகள் 80 சதுர அடியும், 7 கடைகள் 102 சதுர அடியிலும் கட்டப்பட்டுள்ளன. 111 சதுர அடியில் 57 கடைகளும், 126 சதுர அடியில் 50 கடைகளும், 137 சதுர அடியில் 5 கடைகளும், 145 சதுர அடியில் 6 கடைகளும், 188 சதுர அடியில் 3 கடைகளும், 252 சதுர அடியில் 18 கடைகளும், 312 சதுர அடியில் 4 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், Òசரபோஜி மார்க்கெட்டில் முன்பு இருந்த கடைகளின் அளவு பெரிதாக இருந்தது. தற்போது கடைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், வைப்புத் தொகையும், மாத வாடகையும் அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் ஏலம் கேட்க ஆர்வம் காட்டவில்லை. ஏற்கனவே இந்த மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் பலரும் சந்தைக்கு அருகில் உள்ள தெருக்களில் பெரிய அளவில் கடையை திறந்துள்ளனர். சிறு வியாபாரிகள் மட்டுமே தற்போது வந்துள்ளனர்Óஎன்றனர்.