நீர் நிலைகளில் குளிக்க தடை

நீர் நிலைகளில் குளிக்க தடை

Update: 2021-09-23 18:50 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அப்போது ஆந்திர எல்லைப் பகுதியில் பெய்யும் மழையால் மலட்டாற்றுக்குத் தண்ணீர் வரத்து அதிகமாகி உள்ளது. அகரம் ஆறு பகுதியிலும் மழைநீர் அதிகரித்து உள்ளது. இவை அனைத்தும் இணைந்து பாலாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் கால்வாய்கள் வாயிலாக செல்லும் தண்ணீரை இடையூறு இல்லாமல் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நீர்நிலைகளில் பொதுமக்கள், சிறுவர்கள் குளிக்க, துணி துவைக்க, மீன் பிடிக்க, வேடிக்கை பார்க்க மற்றும் செல்பி எடுக்க தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செதுவாலை, விரிஞ்சிபுரம், ஒக்கணாபுரம், இறையன்காடு, மேல் காவனூர், கவசம்பட்டு, அப்துல்லாபுரம், சதுப்பேரி, மேல் மொணவூர், பெரிய ஏரி, கடப்பேரி ஆகிய ஏரிகளை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்