3 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

3 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

Update: 2021-09-23 18:23 GMT
நெமிலி

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று மனுக்கள்  பரிசீலனை நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரிகலபாடி, வேட்டாங்குளம் மற்றும் நெல்வாய் ஆகிய ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனால் அரிகலபாடி ஊராட்சி மன்ற தலைவராக வள்ளி, வேட்டாங்குளம் ஊராட்சி தலைவராக சாந்தி, நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவராக ரேணுகா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் அ.தி.மு.கவை. சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட இவர்களை ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், நெமிலி பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வாழங்கினர்.

மேலும் செய்திகள்