கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 63 மனுக்கள் ஏற்பு
கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 63 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
கரூர்
ஊரக உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டத்தில் 30.6.2021 வரை பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் 15 பதவியிடங்களுக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1 மாவட்ட ஊராட்சி வார்டு எண்.8 (தாந்தோணி ஊராட்சி ஒன்றியம்). ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-1 க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய வார்டு எண்.8., கிராம ஊராட்சி தலைவர்-1 கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சித்தலவாய் கிராம ஊராட்சி.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-12 தாந்தோணி ஊராட்சி ஒன்றியம்: மூக்கணாங்குறிச்சி வார்டு எண்.8, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்: லிங்கமநாயக்கன் பட்டி வார்டு எண்.1, மொடக்கூர் (மேல்) வார்டு எண்.3, வேலம்பாடி வார்டு எண்.10, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம்: க.பரமத்தி வார்டு எண்.8, புன்னம் வார்டு எண்.4, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம்: பிள்ளபாளையம் வார்டு எண்.8, கடவூர் ஊராட்சி ஒன்றியம்: காளையபட்டி வார்டு எண்.1,2,5 மற்றும் 6, வடவம்பாடி வார்டு எண்.8 ஆகிய பதவி இடங்களுக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
63 மனுக்கள் ஏற்பு
இதனையொட்டி கடந்த 15-ந்தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கி, நேற்றுமுன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 22 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 11 பேரும், கிராம ஊராட்சி தலைவருக்கு 4 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 28 பேரும் என மொத்தம் 65 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஒருவர் மனு மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வேட்புமனுதாக்கல் செய்திருந்த 2 பேர் மனு என 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாளை(சனிக்கிழமை) வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.