வெள்ளோடு அருகே கொரோனாவால் மகன் இறந்த துயரத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
வெள்ளோடு அருகே கொரோனாவால் மகன் இறந்த துயரத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னிமலை
வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி, அரவிளக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி வசந்தாமணி (வயது 56). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இவர் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் இறந்து விட்டார். இதனால் வசந்தாமணி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்தார். மகன் இறந்த துக்கத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வசந்தாமணி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவரது குடும்பத்தினர் வசந்தாமணியை தடுத்துள்ளனர்
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டுக்கு அருகே குளியலறையில் உள்ள இரும்பு கம்பியில் வசந்தாமணி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வசந்தாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.