அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்திற்கு ஏலம்

கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போனது.

Update: 2021-09-22 19:27 GMT
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே ராஜேந்திரபும் தென்னை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் தென்னை வணிகவளாகத்தில் மறைமுக ஏலம் முறையில் கொப்பரை கொள்முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 16 விவசாயிகள் 29 குவியலாக 2 ஆயிரத்து 644 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வந்தனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 5 வணிகர்கள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.99-ம் குறைந்தபட்சமாக ரூ.75-ம் ஏலம் போனது. ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 557-க்கும் வியாபாரியிடம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்