காவேரிப்பாக்கத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம்

காவேரிப்பாக்கத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ்நிலையத்தை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-22 18:53 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கத்தில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ்நிலையத்தை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.3 கோடியில் புதிய பஸ்நிலையம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து ஓச்சேரி, பாணாவரம், அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. சென்னை, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்லும். 
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பஸ்நிலையத்தை புதுப்பிக்க காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் முடிவு செய்தனர்.அதன்படி மூலதனம் திட்டத்தின் மூலம் ரூ.3 கோடி மதீப்பீட்டில் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய பஸ்நிலையம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. 

உதவி இயக்குனர் ஆய்வு

இந்த பஸ் நிலையத்தில் வைபை வசதி, பயணிகள் காத்திருப்பு மேடை, நடைமேடை, உணவகங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, கழிவறை, சைக்கிள் நிறுத்தம் கொண்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையம் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தை வேலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆர்.இளங்கோவன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15&வது வார்டு கட்டளைபாட்டை தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்