பொன்னேரி அருகே லாரி உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி - 3 பேருக்கு வலைவீச்சு
பொன்னேரி அருகே லாரி உரிமையாளரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி மேற்கொண்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.
பொன்னேரி,
சோழவரம் அருகே காரனோடை முனிவேல் நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 44). லாரிகள் வைத்து வாடகைக்கு ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு முன்பு 3 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். ரஜினிகாந்த்தை பார்த்தவுடன் அங்கு சென்று தகராறு செய்தனர்.
பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை அவர் மீது வீசி தீ வைக்க முயன்றனர்.
அப்போது ரஜினிகாந்த் ஒதுங்கி கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து லாரி உரிமையாளர் ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் சதீஷ் என்கிற சூர்யா (24), கிஷோர் 24, மற்றொரு சூர்யா (26) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.