பெண் போலீசாருக்கு நவீன நடமாடும் சுகாதார வாகனம்

தென்காசி மாவட்டத்தில் பெண் போலீசாருக்கு நவீன நடமாடும் சுகாதார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-09-21 23:20 GMT
தென்காசி:
தமிழக காவல்துறையில் பெண் போலீசார் பல்வேறு வகையான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் பொதுக்கூட்டங்கள், கோவில் விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு செல்கிறார்கள். அப்போது அவர்கள் அத்தியாவசிய அன்றாட தனிமனித கடமைகளை நிறைவேற்ற முடியாமல் பல இடங்களில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். 

இதனை கருத்தில் கொண்டு அவர்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் தென்காசி மாவட்ட காவல் துறைக்கு அதிநவீன நடமாடும் சுகாதார வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் 3 கழிப்பறைகள், ஒரு உடை மாற்றும் அறை, தானியங்கி நாப்கின் எந்திரம், நாப்கின் எரியூட்டி எந்திரம் போன்ற வசதிகள் உள்ளன. இந்த வாகனம் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இடங்களுக்கு அனுப்பப்படும். அதன்மூலம் பெண் போலீசார் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்