மதுரை
மதுரை தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் 30ந் தேதி வரை காலை 6.15 முதல் 6.25 வரையும்,தொடர்ந்து 6.40 முதல் 6.50 மணி வரையிலும் சூரிய கதிர்கள் கருவறைக்குள் பிரவேசிக்கும். ஆனால் கடந்த 3 நாட்களாக மழை மேகமாக இருந்ததால் சூரியன் சரியாக தெரியவில்லை. நேற்று தெள்ளத் தெளிவாக வானம் இருந்ததால், சூரிய கதிர்கள் கோவிலின் மூன்று துவாரங்கள் வழியாக கருவறைக்குள் சென்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் சூரிய வழிபாடாக கருதி சாமி தரிசனம் செய்தனர்.