மூதாட்டியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

மூதாட்டியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-09-21 18:49 GMT
ராமநாதபுரம், 

மூதாட்டியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மூதாட்டி கற்பழிப்பு
 ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர் குப்பை என்பவரின் மகன் கழட்டி என்ற முத்துமாரி(வயது 67). மீனவர். இவர் கடந்த 2018&ம் ஆண்டு பக்கத்து வீட்டில் தனியாக படுத்திருந்த 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துமாரியை கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா, மூதாட்டியை கற்பழித்த முத்துமாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்