சிவகங்கையை அடுத்த அரசனிமுத்துபட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (வயது 38). இவரது மனைவி சுஜாதா (34). பஞ்சவர்ணம் துபாயில் வேலை பார்த்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரது மனைவி அருகேயுள்ள நைனாகுளம் என்ற கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்தார். அங்கு வந்த கணவன்- இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது பஞ்சவர்ணம் மனைவியை கத்தியால் குத்தினாராம். இதில் காயம் அடைந்த சுஜாதா சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ் குற்றம் சாட்டப்பட்ட பஞ்சவர்ணத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.