பெண் மர்மமாக இறந்த சம்பவத்தில் தம்பி சரண்
தூசி அருகே பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் அவர் கள்ளத்தொடர்பை கைவிடாததால் அடித்துக்கொன்றேன் என கூறி தம்பி சரண் அடைந்தார்.
தூசி
தூசி அருகே பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் அவர் கள்ளத்தொடர்பை கைவிடாததால் அடித்துக்கொன்றேன் என கூறி தம்பி சரண் அடைந்தார்.
கணவன்-மனைவி தகராறு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த அப்துல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி பிள்ளை. இவரது மகன் வெங்கடேசன் (வயது 35). இவருக்கும் வாலாஜாபாத்தை அடுத்த சங்கராபுரத்தைச் சேர்ந்த வாசுதேவன் மகள் ராஜேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோலேஷ்கண்ணன் (வயது 4) என்ற மகன் உள்ளார்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு கணவன்& மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வெங்கடேசன் வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் அவரது தம்பி பிரபாகரன் தங்கியிருந்தார். கடந்த 18&ந் தேதி இரவு ராஜேஸ்வரி தூங்கிய நிலையில் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் அவர் வெகுநேரம் ஆகியும் எழுந்தரிக்கவில்லை.
அவரது மாமியார் எமலாம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜேஸ்வரியை எழுப்பும்போது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரத்தக்காயங்களும் இருந்தன.
இதுகுறித்து எமலாம்மாள் தூசி போலீசில் புகார் செய்தார்.
தூசி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு ப்பதிவு செய்து இறந்த ராஜேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணை மேற்கொண்டனர்.
தம்பி சரண்
இந்த நிலையில் ராஜேஸ்வரியை நான் தான் அடித்துக் கொன்றேன் என்று கூறி கிராம நிர்வாக அலுவலர் லதா முன்னிலையில் ராஜேஸ்வரியின் தம்பி பிரபாகரன் சரண் அடைந்தார். அவரை போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
ராஜேஸ்வரி சில ஆண்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதனால் அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் அவரது கணவர் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். குடும்ப தகராறுக்கு காரணமான கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி தம்பி பிரபாகரன் அறிவுரை கூறியுள்ளார்.
18-ந் தேதி இரவும் பிரபாகரன் அறிவுரை கூறியபோது அதனை ராஜேஸ்வரி கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அவரது தலை முடியை பிடித்து இழுத்து சுவர் மீது தள்ளி விட்டேன். தலை சுவரில் மோதியதில் ராஜேஸ்வரி மயக்கமாகி கீழே விழுந்தார்.
அதன்பின் கழுத்தை பிடித்து இறுக்கியதில் ராஜேஸ்வரி இறந்தபின் அங்கிருந்து பிரபாகரன் தப்பி விட்டார். போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் அடைந்தார்.
இதையே வாக்குமூலமாக பிரபாகரன் கொடுத்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.