ஒரே நாளில் 734 பேர் வேட்பு மனு தாக்கல்

ஒரே நாளில் 734 பேர் வேட்பு மனு தாக்கல்

Update: 2021-09-21 18:03 GMT
வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந் தேதி முதல் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு பெறப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 100 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 560 பேர் என்று நேற்று ஒரேநாளில் 734 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 2,478 பதவிகளுக்கு இதுவரை 5,052 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்கள் பலர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசிநாளாகும்.

மேலும் செய்திகள்