தூத்துக்குடி அருகே சாலைஓரத்தில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

தூத்துக்குடி அருகே சாலைஓரத்தில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்

Update: 2021-09-21 13:28 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி&பாளையங்கோட்டை ரோட்டில் வாகைகுளத்துக்கு மேற்கே வர்த்தக ரெட்டிபட்டி பிரிவு ரோட்டுக்கு அருகே பள்ளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணம் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் சிவப்பு நிறத்தில் கருப்பு கோடு போட்ட முழுக்கை சட்டை, சாரம் அணிந்து இருந்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்