பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 09:26 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. வினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாணவர் அணி செயலாளருமான சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ரெயில்வே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்தும் கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் கோஷங்களை எழுப்பியும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்