மத்திய அரசு கண்டித்து தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 05:55 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் அவரவர் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். ஆங்காங்கே வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் முன்னிலை வகித்தார். கூட்டுறவு பணியாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.ஆர்.முருகேசன், தடங்கம் ஊராட்சி கிளை செயலாளர் கே.பழனிசாமி, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சுகுமார், கிளை பிரதிநிதி மாது, கட்சி நிர்வாகி கோவிந்தசாமி, இளைஞரணி டாக்டர் இளையசங்கர், லட்சுமி சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
காரிமங்கலம்-மோளையானூர்
இதேபோன்று காரிமங்கலம் பேரூராட்சி 3&வது வார்டு ஏரியின்கீழூர் பகுதியில் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பசேகரன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய விவசாய அணி நிர்வாகி சக்திவேல், கிளை செயலாளர் கணேசன், நகர இளைஞரணி அருள், வசந்த், சேட்டு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மோளையானூர் கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சித்தார்த்தன், தனபால், நெப்போலியன், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், துணைத்தலைவர் அருணா இளஞ்செழியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லதுரை, ஊராட்சி தலைவர்கள் துரைப்பாண்டியன், மாலா மாரப்பன், சாந்தா குப்புசாமி, அன்பழகன், மோளையானூர் கிளை நிர்வாகிகள் ரமேஷ், ஆசிரியர் இளஞ்செழியன், உதயசூரியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்