200 மதுபாட்டில்கள் பறிமுதல்
காரியாபட்டியில் 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரியாபட்டி,
காரியாபட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள செயல்படாத பழைய டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையிலும் அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உத்தரவின் பேரிலும் காரியாபட்டி சப்&இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி மற்றும் போலீசார் கடையில் சோதனை செய்ய சென்றனர். அப்போது ஒருவர் அங்கிருந்து ஓடி விடவும், சோதனை செய்ததில் 178 விஷ நெடியுடன் கூடிய திரவம் மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே காரியாபட்டி போலீசார் அனைத்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல காரியாபட்டி தேவர் சிலை அருகில் செயல்படாத பழைய டாஸ்மாக் பார் கடையில் மது பாட்டிகள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் சோதனை செய்ய சென்றனர். அப்போது அந்த கடையில் இருந்த நபர் ஓடிவிட போலீசார் சோதனை செய்தபோது 24 விஷ நெடியுடன் கூடிய திரவம் மதுபாட்டில்கள் வைத்து இருப்பதை கண்டு 24 மது பாட்டில்களையும் காரியாபட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.