ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-20 18:56 GMT
கரூர்
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் கரூர் மாவட்டம், மரவாபாளையத்தை சேர்ந்த ஜெயலெட்சுமி (வயது 41) என்ற ஒப்பந்த பணியாளர், பெண்கள் பிரசவ வார்டில் இரவு நேர பணியில் இருந்துள்ளார். அப்போது பிரசவ வார்டில் இருந்த ஒரு பெண் ஒருவரின் கணவர் பெண் பணியாளர் ஜெயலெட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் பெண் பணியாளரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரியும் நேற்று பணியினை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இதுபோன்ற சம்பங்கள் இனி நடைபெறாது என்றும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் உறுதியளித்ததை தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்