வீட்டில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்

ஜமுனாமரத்தூரில் வீட்டில் கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்.

Update: 2021-09-20 18:11 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்துரை அடுத்த புளிச்சகோட்டை மலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி சவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று திடீரென பரசவ வலி ஏற்பட்டது. 

உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மருத்துவ உதவியாளர் லட்சுமணன் மற்றும் டிரைவர் வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். 

அங்கு சவிதா பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். பின்னர் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் லட்சுமணன் பெண்ணிற்கு அவரது வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

பின்னர் தாயும், சேயும் உறவினர்கள் உதவியோடு உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஜமுனாமர்த்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்