திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,301 பேர் வேட்புமனு தாக்கல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,301 பேர் வேட்புமனு தாக்கல்

Update: 2021-09-20 17:42 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 208 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனுதாக்கல் மாவட்டத்தில் சூடு பிடித்துள்ளது.

நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 13 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 79 பேரும், ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 177 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,032 பேரும் என 1,301 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்