பழனியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

பழனியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட

Update: 2021-09-20 15:39 GMT
பழனி:
பழனி தெரசம்மாள் காலனி பகுதியில் 500 மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தெரசம்மாள் காலனி பகுதியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் பழனி-தாராபுரம் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள், தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் பழனி&தாராபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்