சரக்கு ஆட்டோவை காணவில்லை

சரக்கு ஆட்டோவை காணவில்லை

Update: 2021-09-20 11:58 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில், முத்துக்குமார் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் வயது 54. இவர் சரக்கு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு  வெள்ளகோவில், பழைய பஸ் நிலையம் அருகே சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு சாவியை அதிலேயே விட்டுவிட்டு டீக்கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது சரக்கு ஆட்டோவை காணவில்லை. அங்கும் இங்கும் தேடி பார்த்து எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார்.
 புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ராஜ் ஏட்டு மணிமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை தேடி வந்தனர். இந்த நிலையில்  முத்தூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த சரக்கு ஆட்டோ காணாமல் போன சுப்பிரமணியத்துக்கு சொந்தமான சரக்கு ஆட்டோ என்பது தெரியவந்தது. உடனே சரக்கு ஆட்டோவை கைப்பற்றி அதை ஓட்டி வந்த கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் 34 என்பவரை கைது செய்தனர்.  

மேலும் செய்திகள்