குண்டும்-குழியுமான சாலை
கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து சுக்ரவார்பேட்டை செல்லும் சாலை பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே பழுதான சாலைகளை சரிசெய்ய வேண்டும்.
ஆனந்தன், கோவை.