ஓடையில் குப்பை கழிவுகள்
கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் தெருவில் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே ஒரு கழிவுநீர் ஓடையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அங்கு சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்குவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் ஓடையில் கொட்டப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்வதுடன், அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
இனியன், வேலாண்டிபாளையம்.