குப்பைகளால் துர்நாற்றம்
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள பொது கழிவறை சரியாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. அத்துடன் அதன் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் அந்தப்பகுதியில் இருக்க முடியாத அளவுக்கு கடுமையாக துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாக்யலட்சுமி, சின்னவேடம்பட்டி.